வடக்கின் முதல் புத்தகக் காட்சி
படங்கள்: டெனிசியஸ் கனியூட் அரவிந்தறாஜ்
முப்பதாண்டுகள் இலங்கையில் போர் நடந்து முடிந்திருக்கிறது. போர் எனும் சொல் தேய்வழக்கானதாக மாறிக்கொண்டிருந்தாலும் அது தந்துவிட்டுப்போன பாதகமான அழிவுகள் நூற்றாண்டுகள் கடந்தும் உரையாடப்படும். இலங்கையின் கடந்த காலத்தில் படைப்பிலக்கியம், நாடகம், இசை உட்பட்ட ஏனைய அனைத்துக் கலைப்போக்குகளின் பாடுபொருள்களும் போரை மையப்படுத்தியதாகவும் அதன் பிரச்சாரமாகவும் அமைந்திருந்தன. சமூக விடுதலை, மனித விழுமியங்கள் குறித்த கலை இலக்கிய அசைவுகள் அரிதாகவே நடைபெற்றன.
2009 போர் முடிவுக்குப் பின்னர் பாரிய உயிர், பொருளிழப்பிற்குப் பிறகான 15 ஆண்டுகளில் கலை, இலக்கியங்களின் போக்கைக் கவனிக்க வேண்டியிருக்கிறது. போர்க்காலத்தில் முப்பதாண்டுகள் கலை, இலக்கிய அசைவின் தொட