வங்கத்தின் எழுச்சியும் எதேச்சாதிகாரத்தின் வீழ்ச்சியும்
courtesy: ct24.ceskatelevize.cz 3
கடந்த ஆகஸ்ட் 5 அன்று தில்லிக்கு அருகிலுள்ள ஹிண்டன் ராணுவத் தளத்தில் ஹெலிகாப்டர் தரையிறங்கியது. சில மணிநேரங்களுக்கு முன்புவரை வங்க தேசத்தின் பிரதமராக இருந்த ஷேக் ஹசீனா ஹெலிகாப்டரிலிருந்து இறங்கினார். அவரது சகோதரி ஷேக் ரெஹானா உடனிருந்தார். வரலாறு திரும்ப எழுதப்படுவதாக இருவருக்கும் தோன்றியிருக்கலாம். 49 ஆண்டுகளுக்கு முன்பு 1975இல் இதே ஆகஸ்ட் மாதத்தில் சகோதரிகள் இருவரும் தில்லியின் இன்னொரு விமானத் தளத்தில் தரையிறங்கி இதேபோல் இந்தியாவில் தஞ்சம் புகுந்தனர்.
1975இல் வங்கத்தின் பிரதமராக இருந்த ஷேக் முஜிபுர் ரஹ்மான் சில ராணுவச் சதிகாரர்களால் கொல்லப்பட்டார். அவருடன் இருந்த குடும்பத்தினர் அனைவரும் கொலையுண்டனர். நல்வாய்ப்பாக அவரது மகள்கள் ஷேக் ஹசீனாவும் ஷேக் ரெஹானாவும் மேற்கு ஜெர்மனிக்குப் பயண