இலங்கை ஜனாதிபதித் தேர்தல்: 2024 வரலாற்றை மாற்றுமா?
பதவிப்பிரமாணம் ஏற்றுக்கொள்ளும் புதிய ஜனாதிபதி அனுர குமார திசநாயக்க
தென்னாசிய நாடுகளின் தேர்தல்களில் பொதுவாக அவதானிக்கப்படும் ஒரு விடயம் ஏற்கெனவே ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் ஒரு பிரதிகூல நிலையை எதிர்கொள்வது (Anti-Incumbency Factor). இலங்கையில் கடந்த செப்டம்பர் 21ஆம் தேதி இடம்பெற்ற ஜனாதிபதித் தேர்தலில் இந்தக் காரணி முற்றிலும் வித்தியாசமான விதத்தில் செயல்பட்டது. அதாவது, இன்று இலங்கை எதிர்கொண்டுவரும் வரலாறு காணாத பொருளாதார, சமூக நெருக்கடிக்கு 1948 சுதந்திரத்துக்குப் பின்னர் ஆட்சிசெய்த அனைத்துக் கட்சிகளும் பொறுப்பேற்க வேண்டும் என்ற விதத்திலும், அதனால் அக்கட்சிகள் அனைத்தையும் மக்கள் நிராகரித்து ஒதுக்க வேண்டும் என்ற விதத்திலும் சிங்களச் சமூக ஊடகங்களின் பக்க பலத்துடன்