அகலாது அணையாது
]
ஓவியம்: ரவி பேலட்
இதுவரை அவளுக்குச் சரியான ப்ரா அமைந்ததே இல்லை. இந்த விஷயம் அவளுக்கு மட்டுமே தெரிந்ததாக இருக்கும்வரை பிரச்சினையாக இல்லை. இப்போது அம்மா எப்படியோ கண்டுகொண்டதுதான் பிரச்சினையே. அம்மாவின் கண்களுக்கு எதுவும் தப்புவதில்லை. போன வாரம் பின்கழுத்தில் ஒரு சிறு காயம். கையில் போட்டிருந்த மோதிரம் அல்லது அவளது நகத்தினால் உண்டான காயமாகக்கூட இருக்கலாம். தேங்காய் எண்ணெய் தடவச் சொல்லி அம்மா நச்சரித்தபடி இருந்தாள். சாதனா மறந்துவிட்டாள். அம்மாவே வந்து தடவியும் விட்டாள். மூன்று நாட்கள் இரண்டு வேளையென அந்தக் காயம் சரியாகும்வரை எண்ணெய்ச் சிகிச்சை. ப்ரா விஷயத்தைச் சும்மாவிடுவாளா!
வெளியே தெரியாத விஷயம்தானே, எப்படியிருந்தால் என்ன என்று பெரிதாக அதற்கு அலட்டிக்கொண்டதில்லை சாதனா. ஆனால் ப்ரா வாங்கச் செல்வதுதான்