மதுவிலக்கில் தலித்துகளும் காந்தியர்களும்
விசிகவின் மது, போதை ஒழிப்புப் பெண்கள் மாநாட்டில் வைக்கப்பட்டிருந்த ராஜாஜியின் கட்-அவுட்
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மது மற்றும் போதை ஒழிப்பு மாநாடு அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து ஊடகங்களில் மதுவிலக்குக் குறித்த விவாதம் தொடங்கியது. விடுதலைச் சிறுத்தைகளின் மாநாட்டில் அதிமுக வும் கலந்துகொள்ளலாம் என்ற அறிவிப்பு ஆளும் திமுக விற்கான நெருக்கடியாகவும், அடுத்த சட்டமன்றத் தேர்தல் கூட்டணி மாற்றத்திற்கான தொடக்கமாகவும் ஊடக விவாதங்களாயின. கள்ளக்குறிச்சி விஷச்சாராய மரணங்களே இந்த மது ஒழிப்பு மாநாட்டிற்கான அவசியத்தை உருவாக்கியது என்று விடுதலைச் சிறுத்தைகள் தரப்பில் விளக்கம் தரப்பட்டது. விஷச்சாராயத்தால் 65 பேர் மரணமடைந்தது அவ்வளவு எளிதில் கடக்கக்கூடியது அல்ல. மது மனமகிழ்வுக்கானது என்ற வாதம் வறிய நிலையிலுள்ள மனிதர்களுக்குப் பொர