ரவிசுப்பிரமணியன்
பகர்தற்கறியேன்
உச்சிக் கால வேளையில்
நசநசக்கும் நபர்கள் குறைந்து
சற்றே வெறிச்சிட்டிருந்தது பிரகாரம்
நோக்கமற்று ஆகாயம் பார்க்க
சடசடத்தன புறாக்கள்
கற்சாளரம் உள் நுழைந்து
நெளிந்தும் மறைந்தும்
மினுக்கிற்று வெய்யில்
பிரகாரப்படியில் அமர்ந்திருந்தவன் காதில்
சட்டென மின்னிச் சிமிட்டி
கிண்ணென்று அதிர்ந்ததந்த
இந்தளப் பண்திரள்
மூடிய விழிகளுடன்
சீவாளி வழி செல்லும்
நாபிக்கமலக் காற்று
மாய ஸ்வரங்களாய்
எல்லார்க்குமான வலியின் தீற்றலும்
சொஸ்த ஒத்தடமுமாய்
திடீரெனப் பூத்த
மத்தாப்புப் பொறிகளென
ப்ருகாக்கள்
நினைவுகளில் பாரித்த நீல இழைகள்
வீர்யமிழப்பதைப்
புலனுற்றவாறே இருக்கையில்
ஆலாபனை
நிலைக்கு வந்து
கீழ் ஸ்தாயி மெல்லொலிய