உறைந்த காலத்தில் சந்தித்தல்
நூல் வெளியீட்டு விழாவில்...
லாவண்யா சுந்தரராஜனின் ‘அதே ஆற்றில்’ சிறுகதைத் தொகுப்பு எட்டு இரட்டைச் சிறுகதைகளால் ஆனது; மொத்தம் பதினாறு கதைகள். இவை புராணங்கள், தொன்மங்கள், பழமரபுக் கதைகளின் சொல்லப்படாத, விவரிக்கப்படாத தரப்பின் நியாயங்களையும் வலிகளையும் பேசுகின்றன. இத்தொகுப்பின் கட்டமைப்பு வியப்பூட்டும் புதிர்த்தன்மைகொண்டது. அதாவது, ‘அதே ஆற்றில்’ எனத் தலைப்பிட்டுள்ளதும், இரட்டைக் கதைகளைக் கொண்டு பிரதி அடுக்கப்பட்டிருப்பதும் மறைந்துள்ள புதிரின் கோடுகளை வாசகருக்கும் காட்டிவிடுகிறது.
பொ.மு 544இல் வாழ்ந்த கிரேக்கத் தத்துவ அறிஞர் ஹெரக்லிடஸ், “ஒருவர் இரண்டாம் முறை அதே ஆற்றில் இறங்க இயலாது, ஏனெனில் இரண்டாம் முறை அவரும் நதியும் அதே தன்மையுடையதாக இருப்பதில்லை” என்றார். இந்தத் தத்துவ