நிசார் கப்பானி கவிதைகள்
நிசார் கப்பானியுடன் அவரது மனைவி
நிசார் கப்பானி (1923-1998): சிரியாவின் தலைநகரான டமாஸ்கஸில் ஒரு நடுத்தர வர்க்க வணிகக் குடும்பத்தில் பிறந்தார். முன்னோடி அரபு நாடக ஆசிரியரான அபு கலீல் கப்பானி இவரது தாத்தா ஆவார். டமாஸ்கஸ் பல்கலைக்கழகத்தில் சட்டம் பயின்ற கப்பானி அயலுறவுத் துறை அதிகாரியாக எகிப்து, துருக்கி, லெபனான், பிரிட்டன், சீனா, ஸ்பெயினில் உள்ள சிரிய தூதரகங்களில் பணியாற்றினார், 1966 இல் ஓய்வு பெற்று லெபனானின் பெய்ரூட் நகருக்குச் சென்றார். அங்கு அவர் மன்ஷுரத் நிசார் கப்பானி என்ற வெளியீட்டு நிறுவனத்தை நிறுவினார். கல்லூரியில் படிக்கும்போதே அவர் கவிதைகள் எழுதத் தொடங்கியிருந்தார