ஷாஅ கவிதைகள்
இன் செய்
கல்லை உடைக்காமல்
பாறையைப் பெயர்க்காமல்
அடர்வனம் சாய்க்காமல்
பெருந்தீ மூட்டாமல்
உயிர் வேர் பிடுங்காமல்
சுனை நீர் மாற்றாமல்
வாழ் நிலம் சேதப்படுத்தாமல்
எவ்வினத்தையும் நசுக்காமல்
தட்ப வெப்பம் பிசகாமல்
முழு முதற் கண்ணும் காலும் படிந்த
செழு மலையை
அப்படியே நகர்த்துவது எப்படி
இற்றை நாளின்
ஒற்றை உலகில் வாழ்வது எப்படி
வடியும் விழி நீர் காய்ந்து
காலம் உறைந்து
பிரக்ஞையின்றி அமர்ந்திருக்கும் மேனியின்
புறம் தழுவி
உள் வியாபகமுறும்
காற்று உரைத்தது:
அது ஒன்றும் சிரமமில்லை.
மனத்தை நிலைப்படுத்தி
கவனம் குவி