சுழல்
ஓவியம்: பி.ஆர். ராஜன்
வட்டத் தொப்பியைச் சரி செய்தபடி கால்களை மடக்கிப் பாதங்களை ஊன்றி உட்கார்ந்தார் சுதீப். சுட்டெரிக்கும் வெயில். கண்ணுயர்த்திப் பார்க்க முடியவில்லை. மட்டையாளர்கள் இருவரும் தலைக்கவசத்தைக் கழற்றிவிட்டுத் தண்ணீர் பருகிக்கொண்டிருந்தனர். பந்து வீசும் அணியினரும் கூடி நின்று தண்ணீர் குடித்தபடி அடுத்தக்கட்ட திட்டத்தை ஆலோசித்துக்கொண்டிருந்தனர். வழக்கமான உள்ளூர் அணிகளுக்கு இடையேயான போட்டிதான். ஆனால் இன்று வழக்கத்துக்கு மாறாக மாநில அணியின் முக்கிய நிர்வாகிகள் பலரும் கூடியிருந்தனர். தேசிய அணித் தேர்வாளர்களில் தென் மண்டலப் பிரதிநிதியான பவன் குமார் ரெட்டி ஆட்டத்தைக் காண வந்திருக்கிறார். ஐபிஎல் பிரபலமான அவருடைய மகன் லோகேஷ் பவனும் ஓர் அணியில் ஆடுகிறான். பந்து வீசும் முனையில் நின்றிருந்த நடுவர் கிருஷ்ணா ராவ் கட