தேசியக் கல்விக் கொள்கையும் மாநிலக் கல்விக் கொள்கையும்
‘தமிழ்நாட்டுக்கென்று தனித்த, தனித்துவமான கல்விக் கொள்கை உருவாக்கப்படும்’ இது தமிழ்நாடு முதலமைச்சரின் மூன்றாண்டுகளுக்கு முந்தைய (2021) அறிவிப்பு. 2021இல் மு.க. ஸ்டாலின் முதலமைச்சராகப் பதவியேற்றவுடன் அவரிடமிருந்து வெளியான சில முக்கிய அறிவிப்புகளுள் இதுவும் ஒன்று. அவரது கட்சியின் தேர்தல் வாக்குறுதிகளில் இது இடம்பெற்றிருந்ததாகவும் நினைவு. இதற்கு இந்த அளவு அவர் முக்கியத்துவம் கொடுத்ததற்குக் காரணம் உண்டு. மத்திய பாஜக அரசு வெளியிட்டிருந்த (புதிய) தேசிய கல்விக் கொள்கை 2020இன் வரைவு தொடர்பாக நாடெங்கிலும் பரவலாக விவாதங்கள் நடந்துகொண்டிருந்த காலம் அது. தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் அறிவிக்கப்பட்ட நேரத்தில் கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள், நடுநிலையாளர்களிடமிருந்து தேசிய கல்விக் கொள்கைக்குத் தீவிர எதிர்ப்பு எழுந்து சுழன்றுகொண்டிருந்தது. தமிழ்நாட்டில் அந்த எதிர்ப்பு உச்சத்திலிருந்தது. தமிழ்நாட்டின் அன்றைய ஆளுங்கட்சியும் பாஜகவின் அப்போதைய கூட்டணிக் கட்சியுமாயிருந்த அதிமுகவும்கூடத் தேசியக் கல்விக் கொள்கையைக் குறிப்பாக, அதன் மும்மொழிக் கொள்கை போன்றவற்றை ஏற்க மறுத்தது கவனத்துக்குரியத