புலவர் வரலாறு, தமிழ்க் கல்வி வரலாறு, சமூக வரலாறு
‘ஸ்ரீ மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் சரித்திரம்’ எவ்விதம் உருவானது?
1887இல் 23 ஏட்டுச் சுவடிகளை ஒப்புநோக்கிச் சீவக சிந்தாமணியைப் பதிப்பித்தார் உ.வே.சா. அதில் ஓர் ஆய்வு முன்னுரையும் எழுதினார். நூலாசிரியரான திருத்தக்க தேவரின் வரலாற்றையும் அதில் எழுதிச் சேர்த்தார். அதை வாசித்தவர்கள், உ.வே.சா.வை அணுக்கமாகவும், அவர் மீனாட்சிசுந்தரம் பிள்ளையின் தலைமை மாணாக்கர்களுள் ஒருவர் என்பதையும் அறிந்தவர்கள், பிள்ளையவர்களின் சரித்திரத்தையும் இதே போல எழுத வேண்டுமென்று உ.வே.சா.விடம் கோரினார்கள். இதனினும் தான் செய்யத்தக்க சிறந்த பணி வேறொன்றும் இராது என்றுதான் உ.வே.சா.வும் கருதினார். எனினும் இந்த நூலை வெளியிட அவருக்கு மேலும் 46 ஆண்டுகள் தேவைப்பட்டன. ஏன்? ‘செய்வன திருந்தச் செய் என்பது அமுத வாக்காதலின் தொடங்கிய முயற்சியை இயன்றவரையில் ஒழுங்