இந்திய மௌனமும் தமிழக எதிர்வினையும்
ஈழத் தமிழர்களின் உரிமைக்குப் போராடிய தமிழரசுக் கட்சியின் தலைவர் எஸ்.ஜே.வி. செல்வநாயகத்துக்கும் அப்போது பிரதமராக இருந்த பண்டார நாயகாவுக்கும் இடையில் நிகழ்ந்த ஒப்பந்தம் பண்டா-செல்வா ஒப்பந்தம்.
இலங்கை இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணக்கூடிய அந்த ஒப்பந்தம் 1958ஆம் ஆண்டு ஏற்பட்டது. 1958 ஏப்ரல் மாதம் ஒன்பதாம் தேதி புத்த பிக்குகள் 200 பேர் பண்டா-செல்வா ஒப்பந்தத்தைக் கிழித்தெறிவதற்காக பண்டார நாயகாவின் இல்லத்தை நோக்கி அணிவகுத்துச் சென்றனர். பிரதமர் பண்டார நாயகா அவர்களைக் கையெடுத்துக் கும்பிட்டு அவர்கள் விரும்பியபடி ஒப்பந்தத்தைத் தூள் தூளாகக் கிழித்து வீசியெறிந்தார். ஒப்பந்தத்தைக் கிழித்தெறிந்த செய்தி வெளியானதும், சிங்களவர்கள் தலைநகர் கொழும்பில் தமிழர்கள்மீது தாக்குதல் தொடுத்தனர். தமிழர்கள் அகதிகளாக மண்டபங்களில் தங்கவைக்கப்பட்டனர். தமிழர்