செயலூக்கமிக்க ஜனநாயகம்
மும்பை மீதான நவம்பர் 26 பயங்கரவாதத் தாக்குதல்களில் ஈடுபட்டதாகக் குற்றம்சாட்டப்பட்டுக் கைதுசெய்யப்பட்டுள்ள அஜ்மல் கசப் தனக்குச் சட்ட உதவிகள் செய்யக் கோரி பாகிஸ்தான் தூதருக்குக் கடிதம் கொடுத்திருப்பதாகச் செய்திகள் வெளியாகியுள்ளன. இந்திய உள் துறை அமைச்சக அதிகாரி ஒருவர் பாகிஸ்தான் தூதரை நேரில் அழைத்து அஜ்மலின் கடிதத்தை அளித்ததாகவும் அந்தச் செய்தி தெரிவிக்கிறது.
கைதுசெய்யப்பட்டு மூன்று வாரங்களுக்கு மேலாகியும்கூட அஜ்மலுக்கு இந்தியாவிலிருந்து சட்ட உதவி கிடைக்கப்பெறவில்லை. மும்பை மாநகர வழக்கறிஞர்கள் சங்கம் குற்றம்சாட்டப்பட்டுள்ள அஜ்மலுக்காக வாதாடத் தன் உறுப்பினர்களுக்குத் தடைவிதித்து இயற்றியுள்ள தீர்மானம் அஜ்மலை நீதிக்கு முன்னால் பேச முடியாதவராக நிறுத்தியிருக்கிறது. அஜ்மலுக்காக வாதாட முன்வந்த மும்பையைச் சேர்ந்த வழக்கறிஞர்கள் சிலரை சிவசேனா மிரட்டியிருக்கிறது. அவர்களைத் தாக்கவும் முற்பட்டிருக்கிறது சேனை.
“எந்த ஒரு குற்றம்சாட்டப்பட்ட நபருக்கும் ஆதரவாக வாதாடாமலிருப்பதற்கு ஒவ்வொரு வழக்கறிஞருக்குமுள்ள உரிமையை நாங்கள் பயன்படுத்திக்கொண்டுள்ளோம். எங்களுடைய