‘வரையறைகளை உடைக்க வேண்டும்’
‘மீண்டும் காகங்கள்’ சிறப்புக் கூட்டம் 23.11.2008 ஞாயிறு காலை 10 மணிக்கு சுந்தர விலாஸ் மாடியில் நடைபெற்றது. இதில் அறிவியல் அறிஞர் ஒய்.எஸ். ராஜன் கலந்துகொண்டார்.
இவர் முன்னாள் குடியரசுத் தலைவர் அப்துல் கலாமுடன் இணைந்து பணியாற்றியவர். அவருடன் சேர்ந்து இந்திய முன்னேற்றம் குறித்துப் புத்தகம் எழுதியவர். துணை வேந்தராகப் பணியாற்றிய கல்வியாளர். தமிழில் கவிதை நூல்கள் வெளியிட்டவர். ஒரு குறுகிய வட்டத்திற்குள் தம்மைச் சிறைப்படுத்திக்கொள்ளாமல் வரையறைகளை உடைத்துக்கொண்டு ஆழ்ந்த தேடலில் ஈடுபட்டு வருபவர் ராஜன் எனக் ‘காலச்சுவடு’ கண்ணன் அவரை அறிமுகம் செய்தார்.
வரையறைகளைத் தாண்டுவது என்பது இயல்பானதே. புதிய படைப்பிற்கு இந்நிகழ்வு இன்றியமையாதது. தனித்திருந்த பல்கலைக்கழகமும் தொழிற்கூடமும் இன்று கைகோத்து நிற்கின்றன. கல்வி வே