மலையும் மலை சார்ந்த வாழ்வும்
அவன் மலையையே பார்த்துக்கொண்டிருந்தான். நினைவு தெரிந்த நாளிலிருந்தே அவன் மலைகளைப் பார்த்துக்கொண்டிருக்கிறான். அவனுக்கு மூன்று வயதாக இருக்கும்போது அவன் அப்பாவுக்கு சிம்லாவுக்கு மாற்றலாயிற்று. சில்லென்ற காற்றும் சுற்றிலும் உள்ள மலைகளும் அவன் மனத்தில் பசுமையாகத் தங்கிவிட்டன. சிம்லாவிலிருந்து மிக விரைவில் -மூன்றே ஆண்டுகளில்-கிளம்ப வேண்டியிருந்தது என்றாலும் அந்த மூன்று ஆண்டுகளுக்குள் மலைகள் அவன் மனத்தில் அகற்ற முடியாத அளவுக்கு இடம்பிடித்துவிட்டன. எந்தப் பக்கம் திரும்பினாலும் மலை. கண்ணுக்கெட்டிய தூரம்வரை நான்கு திசைகளிலும் மலை. அண்ணாந்து பார்த்தாலும் மலையைத் தவிர்த்துவிட்டு வானத்தைத் தனியாகப் பார்க்க முடியாது. பச்சை மலைகள். சில சமயம் பளிச்சென்று தலை நரைத்த மலைகள். வீட்டைச் சுற்றிலும் மலை என்பதைவிட, மலைக்கு நடுவில் வீடு என்று சொல்வதே பொருத்தமானது. மலைமீது விள