அறியப்பட வேண்டிய அண்ணா
அண்ணா அவர்களுடன் சிறிது காலம் இருக்கும் அரிய வாய்ப்பைப் பெற்றவன் என்பதோடு, அவராலேயே மிகுந்த பாசத்துடன் ‘மலர்மன்னன்’ என்று பெயர் சூட்டப்பெறும் வாய்ப்பும் கிடைக்கப்பெற்றவன் என்பதால், ‘காலச்சுவடு’105 வெளியிட்ட அவரது நூற்றாண்டு நினைவுச் சிறப்புக் கட்டுரையை ஆர்வத்துடன் வாசிக்கலானேன். காரணம், ‘காலச்சுவடு’ இதழில் இப்படியொரு கட்டுரை வெளியாகிறது என்றால், அது திராவிட இயக்க ஏடுகளில் வழக்கமாக வருவது போன்ற வெற்றுச் சொற்களின் ஆர்ப்பாட்டமாக இருக்காது என்கிற நிச்சயம்தான்.
எதிர்பார்த்தது போலவே சாரமுள்ள விரிவான கட்டுரையாக அது அமைந்து விட்டிருப்பதில் மகிழ்ச்சிதான். ஆனாலும் ஏறத்தாழ நாற்பதாண்டு காலம் தமிழ்ச் சமுதாயத்தில் வியக்கத்தக்க தனிச் செல்வாக்குடனும் இயற்கையாகவே அமையப் பெற்ற தலைமைப் பண்புடனும் விளங்கிய அண்ணா எ