பின்வரும் தலைமுறைகளுக்கான மழை
வானிற் பறக்கின்ற புள்ளெலா நான்
மண்ணிற் றிரியும் விலங்கெலா நான்
கானிழல் வளரு மரமெலா நான்
காற்றும் புனலுங் கடலுமே நான்
-பாரதியார்
இயற்கையோடு இயைந்து வாழ்ந்தனர் நம் முன்னோர். நாகரிக வளர்ச்சி என்னும் பெயரால் இயற்கையுடனான நமது தொப்புள்கொடி உறவு மெல்ல மெல்ல அறுபட்டுக்கொண்டிருக்கிறது. தொடர்பு முற்றிலுமாகத் துண்டிக்கப்படுவதைத் தவிர்க்கும்விதமான எச்சரிக்கைக் குரல்களை அலட்சியப்படுத்தினால் அதற்கான விலையை நாம் கொடுக்க வேண்டியிருக்கும். “உங்கள் குழந்தைகள் உங்கள் வழியாகப் பிறக்கிறார்களே தவிர உங்களிலிருந்து பிறக்கவில்லை” என்றார் கலீல் ஜீப்ரான். குழந்தைகள் பெற்றோருடைய சொற்களிலிருந்து கற்றுக்கொள்வதைவிடச் செய்கைகளிலிருந்துதான் அதிகமாகக் கற்றுக்கொள்வதாகச் சொல்கிறார்கள். அவர்கள் தம் வாழ்வுக்குத் தேவைய