முகம் திருப்பிக்கொள்ளாத நட்பு
முஸ்லிம் தீவிரவாதிகள் இந்தியாமீது போர் தொடுத்ததற்கான ஓர் அடையாளமாகவே 26.11.2008இல் நடந்த பயங்கரவாதத்தைக் கணக்கிட வேண்டும். இது முதல்நிலை. இந்துத்துவத் தீவிரவாதிகள் எப்போதெல்லாம் கடும்நெருக்கடியில் சிக்கித் தவிக்கிறார்களோ அப்போதெல்லாம் முஸ்லிம் தீவிரவாதிகள் ஓடோடிவந்து தங்களின் “சகா”வைக் காப்பாற்றிக் கரையேற்றிவிடுகிறார்கள். இது இரண்டாம் நிலை. நாடாளுமன்றத்தில் பாஜக அரசு கடும்கண்டனங்களுக்கு ஆளாகி மருட்சியடைந்த சமயத்தில் அதன்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் மாலேகாவ் பல உண்மைகளை அம்பலப்படுத்திய சமயத்தில் மும்பையின்மீது நடத்தப்பட்ட தாக்குதலும் இரண்டு தீவிரவாதங்களுக்கும் வலுவான ஒற்றுமையாக அமைந்துள்ளன. இருபத்தைந்து ஆண்டுகளுக்குமுன் என்னை இலக்கியவுலகிற்குள் அழைத்துச்சென்றவர்களில் ஒருவரான இந்தியக் கம்யூனிஸ்ட் கட்சித் தோழராகிய சுடலை அண்ணாச்ச