வாசிப்பில் தோய்ந்த கனவுகள்
தமிழகப் பொது நூலகத் துறை இன்று பல சீர்திருத்தங்களை எதிர்நோக்கியிருக்கிறது.
2006 இல் துவங்கிய திமுகவின் ஆட்சி தமிழகம் கண்டிருக்கும் சிறந்த ஆட்சிகளில் ஒன்றல்ல. முந்தைய (1996 - 2001) திமுக ஆட்சியோடுகூட ஒப்பிடும் தகுதி இதற்கு இல்லை. அது கலைஞர் தலைமையிலான ஆட்சியாக இருந்தது. இன்று நடப்பது குடும்ப ‘ஜனநாயக’ ஆட்சி. தமிழகப் பொதுவாழ்வில் குடும்ப இயல் அரசியலுக்கு மாற்றாகவும் பதவியாகவும் உருவாகி வருவது மிகக் கேடானது.
இருப்பினும் தமிழ்ப் பதிப்பாளர்களுக்கும் புத்தக உலகத்திற்கும் பல நன்மை பயக்கும் செயல்பாடுகள் இந்த ஆட்சியில் ஏற்பட்டுள்ளன. பதிப்பாளர் வாரியம் அமைக்கப்பட்டுள்ளது. பொதுநூலகங்களுக்கு வாங்கும் நூல் பிரதிகள் அதிகரித்துள்ளன. இன்னும் இதுபோல் பல.
நூலகங்கள் ஒரு சமூகத்தின் பண்பாட்டு ஆன்மீக ஸ்தலம். ஒவ்வொரு மாபெரும் சமூக அரசியல் இயக்கமும் வாசிப்பு இயக்கத்தையும் நூலக இயக்கத்தையும் ஏற்படுத்தியிருக்கிறது. தேசிய இயக்கம், இடதுசாரி இயக்கம், திராவிட இயக்கம் இதற்கு உதாரணங்கள். அந்த இயக்கங்களின் சரிவோடு அவர்கள் உருவாக்கிய நூலகங்களும் பெருமளவுக்கு வீ