அமெரிக்கா என்ற கருத்து
பிறப்பால் அனைவரும் சமம் என்ற சுதந¢திரப் பிரகடனம், “ஆகச் சிறப்பான ஒற்றுமைக்காக ஒன்றிணையும் மக்களாக நாம் திகழ்வோம்” என்ற அரசியலமைப்புச் சட்டம், மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மக்களைக் கொண்ட அரசாங்கம் என்ற ஆபிரகாம் லிங்கனின் கெட்டிஸ்பெர்க் சொற்பொழிவு நான் ஒரு கனவு காண்கிறேன் என்ற மார்ட்டின் லூதர் கிங்கின் முழக்கம் ஆகியவற்றை அமெரிக்காவின் புனித சாசனங்களாக நாம் கருதிவருகிறோம். உயர்ந்த லட்சியங்களாகவும் நம்பிக்கைகளாகவும் இவை ஒன்றை மற்றொன்று கட்டமைத்தும் எதிரொலித்தும் வருகின்றன. 1963இல் லிங்கன் நினைவு இல்லத்தின் படிக்கட்டுகளில் நின்று மார்ட்டின் லூதர் கிங் கூறிய வார்த்தைகள் இவை அனைத்தையும் பிரதிபலிப்பவை போல அமைந்துள்ளன. “எந்த மகத்தான அமெரிக்கரின் நிழலில் நாம் இன்று நின்று கொண்டிருக்கிறோமோ அவர்தான் நூறு வருடங்க