அ.கா. பெருமாளுக்கு அறுபது
படைப்பாளிகளைப் பாராட்ட அரசியல் பிரபலங்களையும் செல்வப் பெருந்தகைகளையும் அழைக்கும் வழக்கம் பொதுவாகக் குமரியில் இல்லை. எழுத்தாளர்களை எழுத் தாளர்கள் பாராட்டுவதுதானே சிறப்பு! இவ்வரையறைக்கு உட்பட்டுதான் 30.11.08 ஞாயிறு மாலை நாகர்கோவில் ஏ. பி. என். பிளாசாவில் நடைபெற்ற ‘அ. கா. பெருமாள் 60 - ஆய்வரங்கு’ம் நிகழ்ந்தது.
இலக்கிய வரலாற்றாசிரியரும் நாட்டாரியல் ஆய்வறிஞருமான முனைவர் அ. கா. பெருமாள் தனது முதல் நூலை வெளியிட்டபோது அவருக்கு வயது 29. இவ்வாண்டு தனது அறுபதாவது வயதை நிறைவு செய்யும் அவர் இன்றுவரை வெளியிட்ட நூல்களின் எண்ணிக்கை 52. அவற்றில் பெரும் பான்மையானவை ஆய்வு நூல்கள். ஆய்வரங்கில் எதிரொலித்த அத்தனை பாராட்டுக்குரல்களிலும் அடிநாதமாய் இருந்தது அவரது ஆய்வு நூல்களின் சிறப்பே.
நாட்டாரியல் ஆய்வின் மூலம் வரலாறு துலக்கப்படுக