பாராக் ஒபாமா: பின்-இன (post- racial) மனிதர்
கொழும்புச் சபையார் திரையரங்கில் பார்த்த ஆங்கிலப் படம் ஒன்று நினைவுக்குவருகிறது. வசதியான வெள்ளை இன அமெரிக்கப் பெண் ஒரு அமெரிக்கக் கறுப்பரைக் காதலிக்கிறார். காதலன் கறுப்பாயிருந்தாலும் மத்திய தர வர்க்கத்தவர். இவருடைய பெயருக்குப் பின்னால் அமெரிக்காவில் உள்ள பிரபல பல்கலைக்கழகங்களான சீணீறீமீ மற்றும் யிஷீலீஸீs பிஷீஜீளீவீஸீs பட்டங்கள் உண்டு. இவற்றைவிடக் கூடுதலான செய்தி இவர் நல்ல அழகர். பெற்றோருக்கு அறிமுகப்படுத்த, காதலனை வீட்டுக்குக் கூட்டிக்கொண்டு வருகிறாள். என்னதான் முற்போக்கு எண்ணங்களைக்கொண்டிருந்தாலும் இந்த உறவை ஏற்றுக்கொள்ள அந்த வெள்ளைத் தாய்க்கும் தந்தைக்கும் சங்கடமாயிருக்கிறது. ஒரு கட்டத்தில் தந்தை வருங்கால மருமகனிடம் ‘உங்கள் குழந்தைகள் எதிர்நோக்கப் போகும் பிரச்சினைகள் பற்றி யோசித்திருக்கிறீர்களா?’ என்று கேட்பார். அதற்குக் கறுப்புக் காதலன் சொன்ன விடை: all of our children will be presidents of the United States and they will have colourful administration. திரைப்பட வசனகர்த்தாக்களுக்குக் குறிசொல்லும் வல்லமை உண்டு என்பதற்கு இந்த வசனம் எடுத்துக்காட