வருணன் மேய பெருமணல் உலகம்
‘அறியப்படாத தமிழக’த்தால் அனை வராலும் அறியப்பட்ட தமிழறிஞர் தொ. பரமசிவனின் பத்தாண்டு கால உழைப்பின் விளைவு ‘வழித்தடங்கள்’. இந்நூலில் 16 கட்டுரைகள் இடம் பெற்றுள்ளன. கட்டுரைகளனைத்தும் பல்வேறு காலச் சூழலில் பல கருத் தரங்குகளிலும் இதழ்களிலும் வெளிப்பட்டவை.
சங்க காலம் ஒரு மறுமதிப்பீடு. சங்க இலக்கியத்தில் சமூகவியல் ஆய்வுகள், சங்க இலக்கியத்தில் சாதி அமைப்பின் மூலப்படிவங்கள் போன்ற கட்டுரைகள் சங்க இலக்கியங்கள் பற்றிய நம் அனைவரின் கருத்துகளையும் புரட்டிப் போடுவதாகவுள்ளன. சங்க இலக்கியங்கள், பல கால அடுக்குமுறைகளைக் கொண்டதாகவுள்ளன என்பதோடு தெ.பொ.மீ., மு.கு. ஜகந்நாத ராஜா போன்றோர் கருத்துகளைக் கொண்டு சங்க இலக்கியம் முழுவதும் மூலப்படிவமாகாது, அவற்றுள் பல மொழிபெயர்க்கப்பட்டவை எனக் கூறும் ஆசிரியர், பாணர்களின் வாய்மொழிப் பாட