இந்த முறை முடியாது
2nd December 2008
அன்புள்ள கண்ணன்,
சனிக்கிழமை மாலை வந்துசேர்ந்தேன். பயணத்தின்போது பலத்த மௌனம் காத்தனர் பயணிகள். போர்க்களமாகிவிட்ட ஒரு நகரத்திற்குப் போகிறோம் என்ற உணர்வு யாரையும் விட்டு அகலவில்லை என்று நினைக்கிறேன். 26ஆம் தேதியே என் மனத்தில் சோர்வு கப்பிவிட்டது. கீழே தள்ளத்தள்ள எழும் நகரம்தான் மும்பாய். ஒவ்வொரு முறை வீழ்த்தப்படும்போதும் மீண்டும் நிமிர்ந்து நின்று காட்டும். ஆனால் இம்முறை நடந்திருப்பது தாக்குதல் அல்ல. யுத்தம். வந்து சேரும்வரை தொலைக்காட்சியில் அதன் அத்தனை பிம்பங்களையும் தொடர்ந்து பார்த்ததில் மனம் கனத்துக்கிடந்தது. விமான தளத்துக்கு வழக்கம்போல் விஷ்ணுவும் குழந்தைகளும் வந்திருந்தனர். மூன்றரை வயது ஸோனுவுக்கு ஒரே சந்தோஷம். அவனுக்குப் பள்ளி விடுமுறையாம். வீட்டுப்பாடமும் இல்லையாம். வழக்கமாக நான் குழந்தைகளுக்குத் த