பெரியார் கட்டுரையின் கதி
பெரியாருடைய கட்டுரைகள் மிகவும் சுவாரஸ்யமானவை. குறிப்பிட்ட வகைக் கட்டுரைகள் இப்படித்தான் இருக்கும் என்று நாம் வைத்திருக்கும் பொது வரையறையைச் சுக்குநூறாக்கிவிடுபவை. அவர் பயன்படுத்தும் மொழி பேச்சுத் தொனியைக் கொண்டது. அதனால் அவர் எதிரில் இருந்துகொண்டு நமக்குச் சொல்வது போலவே தோன்றும். அது கட்டுரையின் கூடுதல் பலம். கட்டுரையை வாசிக்கும்போது கவனச்சிதறல் ஏற்படாமல் உள்ளிழுத்துக்கொள்ளும்.
பெரியார் எழுதிய இரங்கல் கட்டுரைகள் சில உள்ளன. இறந்தவர் பற்றிய அனுதாபம் ஏற்படும் வகையில் இரங்கல் கட்டுரை எழுதுவதுதான் மரபு. பெரியார் இயல்பாகவே இந்த மரபுக்கு எதிரானவர். அவர் மனைவி நாகம்மை இறந்தபோது எழுதிய கட்டுரை ‘மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி’ என்று முடியும். அவர் எழுதியுள்ள இரங்கல் கட்டுரைகள் சிலவற்றை வாய்விட்டுச் சிரித்துக் கொண்டே படிக்