கவிஞர்களின் கவிதைப்போர்
காலத்தின் நீண்ட மௌனத்தை எறிந்து தங்கள் குரலைப் பதிவுசெய்து இருக்கின்றனர் தமிழின் தீவிரப் படைப்பாளிகள். அரை நூற்றாண்டாகத் துயரத்தின் மீது தகிக்கும் ஈழத்தமிழர்களின் இன்னல்கள் பதினேழு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கின்ற தமிழர்களின் மனங்களில் ஆழமான பாதிப்பினை ஏற்படுத்தவில்லை என்பதே உண்மை. தொடக்க காலங்களில் இலங்கையில் வெலிக்கடைச் சிறையில் அநியாய மாகக் கொலை செய்யப்பட்ட குட்டிமணி ஜெகன் மறைவுக்குப் பிறகு ஒரு பெரும் எழுச்சி ஈழத்தமிழர் பிரச்சினையில் இங்குள்ள தமிழருக்கு ஏற்பட்டது. அது தமிழக அரசியலில் ஒரு பகடைக்காயாக மாற்றப்பட்டது. அதற்குப் பிறகு தமிழ்த் தேசியம் பேசும் இயக்கங்கள் மட்டுமே ஈழப் பிரச்சினையில் தொடர்ந்து அக்கறை செலுத்திவந்தன என்றால் அது தவறல்ல. கொடுங்கனவாய் முடிந்து போன ராஜீவ் காந்தி மரணத்துக்குப் பிறகு ஈழத்தமிழர் பிரச்சினைப் பற்றிப் பேசுவது