நான் காதலிக்கும் தேவதையே (மலைக்கா, நாகுப்பெண்டா மலைக்கா)
விதி விளையாடாமலிருந்தால் (நஷிண்ட்வா மாலி சினவே)
உன்னை மணமுடித்திருப்பேன் தேவதையே (நிங்கைக்கு ஓவோ மலைக்கா!)
என்ற கிஸ்வாஹிலி கீதம் உலகம் முழுவதும் விரும்பிக் கேட்கப்படும் இனிமையான பாடல். எழுபதுகளில் கோலோச்சிக்கொண்டிருந்த அப்பா (Abba) போனி. எம் (Boney. M) போன்ற மேற்கத்திய இசைக் குழுவினர் சொந்தம் கொண்டாடிய இப்பாடலை எழுதியவர் ஃபதிலி வில்லியம்ஸ் (Fadhili Williams) என்னும் கீன்யப் பாடகர். தான் காதலிக்கும் பெண்ணுக்குச் சீதனம் (Bride Price) கொடுத்து மணமுடிக்க இயலாமையை நொந்து சோகத்திலும் அவன் தன் காதலை வெளிப்படுத்தும் வகையில் அமைந்த ‘மலைக்கா’ பாடல். என் உள்ளங்கவர்ந்த கீதம். கலிப்ஸோ (Calypvo) இசையின் மன்னன் என்றழைக்கப்பட்ட ஹேரி பெலஃபான்ட்டே