கருத்தை கருத்தால் எதிர்கொள்ளல்
திராவிடர் கழகத் தலைவர் கி. வீரமணியின் இந்த ‘ஒப்புதல் வாக்குமூலம்’ ஆச்சர்யத்தை அளிக்கிறது. மிகவும் மனம்நொந்து சொல்லியிருக்கிறார். அரசியல் நாகரிகம் என்பது நேரெதிர் கட்சிகளைச் சேர்ந்த தலைவர்கள் பொதுஇடங்களில் சந்தித்துக்கொண்டால் ஒருவருக்கொருவர் முறுவலிக்க, பேசிக்கொள்ளக் கூட முடியாது போவது மட்டுமல்ல. அத்தகைய குறுகியபொருளில் மட்டும் வீரமணி அதைச் சொல்லியிருக்க முடியாது. ஏனெனில் அத்தகையநிலை தமிழக அரசியலில் உருவானது 1970களுக்குப் பிறகே. ஆனால், இதற்கு சுமார் 50 ஆண்டுகளுக்கு முன்னர் இருந்தே பிராமணரல்லாதார் இயக்கமும் அதன் வழித்தோன்றலுமான திராவிடர் கழகமும் தமிழக அரசியலில் மிகவலுவாக இருந்துவந்திருக்கின்றன. அப்போதெல்லாம் இந்நிலை இல்லை.
அண்ணாதுரையின் தலைமையில் திமுக இருந்தவரையிலும்கூட இந்நிலை தோன்றவில்லை. தமிழகத்தில்
அரசியல் என்பதே எம்.ஜி.ஆர், கருணாநித