திராவிட இயக்கம் கெடுத்த பண்பாடு
“மாற்றான் தோட்டத்து மல்லிகையும் மணக்கும்” என்ற எண்ணத்தை அரசியலுக்கும் கொண்டு
வந்தது ஒரு திராவிட இயக்கம்தான். ஆனாலும், உலகெங்கும் ‘அரசியல் பண்பாடு’ என்ற
கருத்தே ஒரு முரண்நகை. தேர்தல் அரசியலில் மட்டுமல்ல, பன்னாட்டு அரசியலிலும்கூட
மாற்றுக்கருத்தைக் கொண்டவர்களையும் எதிராளிகளையும் மட்டம் தட்டுவதையும்
அவமதிப்பதையும் ஒரு கலையாகவே வளர்த்திருக்கிறார்கள். வெறும் மூலைக்கடை எள்ளலையும்
தரக்குறைவான வசையையும் அருவருப்பானவையாகப் பார்க்கிறார்கள் என்றாலும், மறக்கமுடியாத
சொல் விளையாடல்களையும், நகைச்சுவையான எள்ளல்களையும் மக்கள் ரசிக்கத்தான்
செய்கிறார்கள். கரடுமுரடான அரசியலில் இதெல்லாம் இயல்புதான் என்று ஒரு பக்கம்
நினைத்தாலும், எதிர்க்கட்சியினரை எதிரிக்கட்சியினராகப் பார்க்கும் தன்மையும்,
அவர்களைத் தம் கட்சிக்கு மட்டுமல்ல, நாட்டுக்கும் இனத்துக்கும் மொழிக்கும்
பண்பாட