ஆக்கபூர்வமான ஆலோசனை
வடநாட்டு அரசியல் தலைவர்கள் அரசியலை மறந்து ஒருவரையொருவர் சந்திக்கும்போது அன்பு பாராட்டி அளவளாவும் நாகரிகத்தைப் பார்க்க முடிகிறது; அதே நேரத்தில் துக்கவீட்டில்கூட ஒருவரை ஒருவர் சந்திக்க மறுக்கும், தயங்கும்நிலை அல்லவா இங்கு இருக்கிறது என்று வேதனைப்பட்டிருக்கிறார் கி.வீரமணி. முக்கியமாக, திராவிடர் இயக்கத்தின் பிறப்புக்குப்பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும். இதனை நாம் வெட்கத்தோடும் வேதனையோடும் ஒப்புக்கொண்டே ஆகவேண்டும் என்றும் சொல்லியிருக்கிறார்.
திராவிட இயக்கம் பின்பற்றிவரும் “அரசியல் நாகரிகத்துக்கு” அதன் மூத்த தலைவர் வீரமணி
கொடுத்துள்ள தெளிவான ஒப்புதல் வாக்குமூலம் இது என்று ஆர்.எஸ்.எஸ், இந்து முன்னணி
உள்ளிட்ட திராவிட இயக்க எதிர்ப்பாளர்களும் விமரிசகர்களும் சொல்கிறார்கள். நேற்றுவரை
நாங்கள் சொல்லி வந்தவை எல்லாம் சரியான மதிப்பீடுகளே என்பதற்கு இந்