உறவைப் பேணும் நோக்கம்
விடுதலை ஏட்டில், பிப்ரவரி 23ஆம் தேதி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் கி.
வீரமணி எழுதிய அறிக்கையின் சுருக்கத்தை தினமணி நாளிதழ் வெளியிட்டிருந்தது. நீண்ட
அறிக்கையின் ஓரிடத்தில் அவர் குறிப்பிடுவது என்னவெனில் “திராவிட இயக்கத்தின்
பிறப்பிற்குப்பின் இந்நிலை என்பது கசப்பான உண்மையாகும்” என்கிறார். அரசியலில்
உள்ளவர்கள் எல்லாம் நட்பாகப் பழகாமல், பகையுடன் பார்ப்பதை ஆசிரியர் தனது அறிக்கையில்
குறிப்பிடுகிறார். அந்த அறிக்கையை வெளியிடுவதற்குக் காரணமாக முலாயம் சிங் யாதவின்
பேரனுக்கு, லாலு பிரசாத் யாதவின் மகளை மணம்முடித்த சம்பவம் அமைந்தது. அந்த மண
விழாவிற்குப் பிரதமர் மோடி சென்றிருந்தார். வட இந்தியாவில் அரசியலில் உள்ளவர்களின்
உறவுநிலை இப்படியிருக்க, தமிழகத்தில் இருக்கும் சூழல் தலைகீழாக இருக்கிறது. வடக்கில்
அன்பாகப் பேசிக்கொள்கிறார்கள். மகிழ்ச்சியான தருணங்களில் ஒன்றாகக் க