நிலமிசை விற்று வாழ்வார்
செவ்விந்தியர்களின் நிலங்களை 1800களில் அமெரிக்க அரசு விலைக்கு வாங்க எத்தனித்தபோது, சுகுவாமிஷ் இந்தியர்களின் தலைவரான சியாட்டில் எழுதியதாக ஒரு கடிதம் நீண்டகாலமாக பொதுத்தளத்தில் உலா வருகிறது. அதில் ஒருசில பகுதிகள் நிலம் கையகப்படுத்துதல் சட்ட விவாதத்தைப் புரிந்துகொள்ள மிகவும் உதவும்.
சியாட்டில் சொல்கிறார்: “வாஷிங்டனிலிருக்கும் அதிபர் எங்கள் நிலங்களை வாங்க
விரும்புவதாக செய்தி அனுப்பியிருக்கிறார். ஆனால் எப்படி உங்களால் வானத்தையும்
நிலத்தையும் வாங்கவோ விற்கவோ முடியும்? இந்தக் கருத்தே எங்களுக்கு விநோதமாக
இருக்கிறது. காற்றின் சுகந்தத்தையும் நீரின் மினுக்கத்தையும் நாம் சொந்தமாக்க
முடியாதபோது, இவற்றை எப்படி வாங்க முடியும்?”
“இந்தப் பூமியின் ஒவ்வோர் அங்கமும் என் மக்களுக்குப் புனிதமானது. ஒவ்வொரு ஒளிரும் பைன் மரக்குச்சியும், ஒவ்வொரு மணல் த