வெறுப்பு அரசியல்
‘பகைவனுக்கருள்வாய் நன்னெஞ்சே’ என்று பாடியவர் தமிழ் மண்ணில் பிறந்த மகாகவி. ‘பகை நடுவினில் அன்புருவான நம் பரமன் வாழ்கின்றான் நன்னெஞ்சே’ என்றார்.
இப்போது புகை நடுவில் தீயும் கண்ணுக்குத் தெரிவதில்லை, பகை நடுவில் பரமனும்
இருப்பதாக எவரும் நினைப்பதில்லை. முக்கியமாக இன்றையத் தமிழக அரசியல் உலகில் -
பகைவர்களாகத் தாம் நினைக்கும் நபர்களை அழிக்க பகிரங்கமாக அந்தப் பரமன் சன்னிதிக்கே
போய் அமர்ந்து துஷ்ட சம்ஹார ஹோமம் செய்யப்படுகிறது புராணங்களிலும் தொன்மங்களிலும்
கேள்விபட்டதுபோல. அரசியல் நாகரிகமா? அது காணாமல் போய் இரு மாமாங்க காலத்துக்குமேல்
ஆகிறது. அரசியல் கட்சிகளிடையே வேறு எந்த மாநிலத்திலும் காணமுடியாத ஒரு பகைமை உணர்வு
தமிழ்நாட்டில் வெளிப்படுவது மிக விநோதமான காட்சிதான். அதற்குக் காரணம் திராவிட
இயக்கமே என்று சமீபத்தில் திராவிடக் கழகத்தின் தலைவரும் பெர