பெருமாள்முருகன் - தில்லி ஆளுமைகள்
புதுதில்லியில் பிப்ரவரி 17, 2015 அன்று SAHMAT அமைப்பினர் நடத்திய பெருமாள்முருகன் ஆதரவுக் கூட்டத்தில் கலந்துகொண்டேன். பிப்ரவரி 18 அன்று நடப்பதாக இருந்த சந்திப்பு அன்று ரோமிலா தாப்பர் அவர்களுக்கு வசதிப்படவில்லை என்பதாலும் கூட்டத்தில் கலந்துகொள்ள அவர் ஆர்வம் தெரிவித்ததாலும் பிப்ரவரி 17க்கு மாற்றிவைக்கப்பட்டது.
அன்று மதியம் நேஷனல் புக் டிரஸ்ட்டும் புனித ஸ்டீபென்ஸ் கல்லூரியும் இணைந்து
நடத்திய மொழிபெயர்ப்பு பற்றிய கருத்தரங்கில் பதிப்பாளர் அமர்வில் பங்கெடுத்துவிட்டு
அவசரமாகக் கிளம்பி சஹ்மத் போகும்படி ஆனது. ஒரு கூட்டத்திலிருந்து இன்னொரு
கூட்டத்திற்கு பறக்கும் நட்சத்திரப் பதிப்பாளர் அல்ல நான், இன்று ஏதோ இப்படி
ஆகிவிட்டது என்று அவையோரிடம் மன்னிப்பு கேட்டுவிட்டு சஹ்மத் போகும்போது மணி ஆறு.
இந்திக் கவிஞர், பண்பாட்டு விமர்சகர் அசோக் பாஜ்பாய் இந்தியில் பேசிக்கொண்