வினோத் மேத்தாவின் நாட்குறிப்புகள்
சரியாகச் சொல்வதென்றால் வினோத் மேத்தா ஒரு நாட்குறிப்பாளர். சுருக்கமான, விவரணங்களும் கிசுகிசுக்களுமுடைய சிக்கனமான ஆனால் ஆற்றலுடைய பாணி அவரது எழுத்தினது மட்டுமல்ல, அவரது சிந்தனை முறையே அப்படித்தான் அமைந்திருந்தது. அப்படித்தான் அவர் இந்த உலகத்தை அது வெளிப்படுத்திய அறிவைப் புரிந்துகொண்டார். அலங்காரமற்ற எழுத்தை, புனிதங்களைத் தகர்க்காத எழுத்தை அவர் ஏற்றுக்கொண்டதில்லை. மூளைபெருத்த அறிவுசார் உலகம் ‘கண்ணோட்டம்’ என்று பெரிதாய் அழைத்தவற்றை அவர் நிராகரித்தார். ஆனால் பன்னோக்குடைய வண்ணமயமான எழுத்தை நிச்சயம் விரும்பினார்.
கடைசி பதிற்றாண்டில் வினோத்தின் விருப்பமான சொற்றொடர் எதுவென தேர்ந்தெடுக்க
வேண்டுமானால் ‘கருத்தியல் நபும்சகர்’ என்பதை போட்டியின்றித் தேர்ந்தெடுக்கலாம்.
‘ஒருவர் கருத்தியல் நபும்சகராக இருக்க இயலாது’ என்று அடிக்கடி