கி.ரா - 95
கிரா 95
அன்புடையீர்!
வணக்கம். கி.ரா. என்னும் இலக்கிய ஆளுமை தமிழ் உலகம் இதுவரை கண்டிராத ஓர் ஆபூர்வம். இந்த நதிமூலம் 1923இல் உற்பத்தியாகி, தீராநதியாய் ஓடிக்கொண்டிருக்கிறது. 2017, செப்டம்பர் 16 இல், தன் 95ஆவது வயதில் காலெடுத்து வைக்கிறது. இன்றும் வாசிப்பும் எழுத்துமாய்த் தமிழ், தமிழ்ச்சமூகம் என வற்றாது இயங்கிக்கொண்டிருக்கிறது. எனவே, கி.ரா.வின் 95ஐக் கொண்டாடுவோம்.
கொண்டாட்டத்தின் ஒரு நிகழ்வாக, அவருடைய படைப்புலகம் குறித்த ஓர் ஆய்வு நூலை உருவாக்க முயல்வோம். இது கி.ராவில் தோய்ந்த ஆளுமைகளின் கட்டுரைத் தொகுப்பாக அமையும். இந்த நோக்கில் ஒருங்கிணைப்புக் குழுவினர் முன்னெடுப்பாகச் சில தலைப்புகளைத் தொகுத்துள்ளோம். தலைப்புகள் அனைத்தும் அனைவரின் பார்வைக்கும் பங்களிப்புக்கும் உரியவை என்பதால் இத்துடன் இணைத்துள்ளோம். இவை தவிர, வேறொரு தலைப்பில் எழுத விரும்பினாலும் நீங