‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’ விருது - 2018
கருத்தரங்குகள், உரை யாடல்கள், விருதுகள் எனப் பதிப்புத்துறை சார்ந்து இயங்கிவரும் நிறுவனம் ‘பப்ளிஷிங் நெக்ஸ்ட்’. இந்நிறுவனம் கடந்த பத்து ஆண்டுகளாக கோவாவில் பதிப் பாளர்களின் கருத்தரங்குகளை ஏற்பாடு செய்து நடத்தி வருகின்றது.
அதன் தொடர்ச்சியில் கடந்த ஐந்து வருடங்களாக முப்பது நடுவர்களை அமர்த்திச் சிறந்த பதிப்பாளர், சிறந்த புத்தகம், சிறந்த அச்சுநூல், சிறந்த குழந்தைகள் நூல், சிறந்த ஓவியர், சிறந்த எடிட்டர், சிறந்த அட்டை போன்ற பத்துத் தலைப்புகளில் ஒவ்வோர் ஆண்டும் விருதுகளை வழங்கி வருகின்றது. இவ்வகையில் 2018க்கான சிறந்த பதிப்பாளர் விருதை ‘காலச்சுவடு’ பதிப்பகம் பெற்றிருக்கிறது. காலச்சுவடு பதிப்பகம் வெளியிட்ட ‘பெருவலி’ நாவலுக்கு ரோஹிணிமணி வடிவமைத்த அட்டை இந்திய மொழிகளில் சிறந்த முகப்பு ஓவியமாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டது என்பதை வாசகர்களோடு பகிர்ந்துகொள்கிறோம்.