கொக்கோகமும் தமிழர் காமமும்
காமசூத்ரா போன்ற புகழ்பெற்ற நூல்களின் விளைநிலமாக இருந்தபோதிலும், ஆசியப் பிராந்தியங்களில் காமக்கதைகளின் தோற்றம், வளர்ச்சி, கதையாடல்களில் ஏற்பட்ட மாற்றங்கள் முதலியன பெரிய அளவில் சமூக அறிவியல் ஆய்வுகளுக்கு உட்படுத்தப்படவில்லை. தற்கால ஆபாசக் கதைகளை ஓர் இலக்கிய நடையென எடுத்துக்கொண்டால் அவை தொழில்துறைச் சமூகத்தின் உற்பத்தியாகப் பார்க்கப்படுகிறது. ஆபாசக் கதைகள் மனித உடலுறவைப் பற்றி, புணர்ச்சியின்போது இயங்கும் உடல்களைப் பற்றி வெளிப்படையாக வர்ணிப்பவை. ஆனால் ஒவ்வொரு மொழியிலும் இதுபோன்ற ஆபாசக் கதைகளின் தோற்றத்திற்கு
முன்வரலாறு உண்டு. இதுபோன்ற நவீன காலத்திற்கு முந்திய காமக்கதைகளை ஆய்வுக்கு எடுத்துக்கொண்ட சமூகவியல் ஆய்வாளர்கள் அவற்றினிடையே சில பொதுவான கூறுகளை அவதானிக்கின்றனர்.
ஆபாசத்திற்கு அப்பால்