போயர்பாக் கண்டறிந்த மழைக்கோவில்
வின்சென்ட் போயர்பாக் என்ற ஜெர்மானிய ஓவியன் ஒரு சிறுநூலை எழுதியிருக்கிறான். ‘மணலின் நடனம்’ என்று பெயரிடப்பட்ட அந்த நூலில் ஏழு கட்டுரைகள் உள்ளன. போயர்பாக்கைப் பற்றி எவ்விதமான குறிப்புகளும் அந்த நூலில் இல்லை. ஆனால் அவன் 1912முதல் 1919வரை ஏழு ஆண்டுகள் இந்தியாவில் சுற்றியலைந்திருக்கிறான் என்பதும் கிழக்கிந்திய கம்பெனியின் ஓவியர்களுக்கு உதவியாளராகப் பணியாற்றியிருக்கிறான் என்பதும் அந்த நூலிலுள்ள கட்டுரைகளின் வழியாகப் புரிந்துகொள்ள முடிகிறது.
போயர்பாக் 19ஆம் நூற்றாண்டின் புகழ்பெற்ற தத்துவவாதி. ஒருவேளை வின்சென்ட்டின் தந்தை தத்துவம் படித்தவராக