மேரி மக்தலீனும் தீர்க்கதரிசி
மேரி மக்தலீனும் தீர்க்கதரிசியும் -1564 (Maria Magdalena e Santa- 1564),’ என்ற அத்ரியனா கசலினி பெர்னாஸ்கோனியில் – Adriana Casalini Bernasconi (1548 – 1588) இல் வரையப்பட்ட பதினைந்தாம் நூற்றாண்டைச் சேர்ந்த ஓவியம் கறுப்பு இயேசுவுக்காக மிகப் பிரபலமானது. இத்தாலியப் பெண் ஓவியர் அத்ரியனா பிறந்த ஊரில், வானுக்கு இரு கைகளையும் ஏந்தியபடி செதுக்கப்பட்டிருந்த அவளது கருங்கல் உருவச் சிற்பமும் நினைவு இல்லமும் அமைந்திருக்கும் இடத்திற்கு நேர் எதிரே கால்மைல் தொலைவில் பிறந்து, பஞ்சம் பிழைக்க இங்கு வந்த
ஒருத்தியின் வாழ்வையும் அவள் எங்ஙனம் பரிதாபமாகக் கொலையுண்டாள் என்பதையும் பற்றி இக்கதை பேசுகிறது.
அந்த ஒருத்தியின் பெயர் ஜினா (றெஜினா அலஸ்ஸாந்றோ - Regina Alessandro)), ‘ஜினா’ என்பதற்குப் பேரழகி என்றும் பொருள் கூறுக