ஆண் குழந்தை
மரணக் கடல், வழமைக்கு மாறாக இன்று அமைதியாக இருக்கிறது. அக்னி வெய்யில்; உக்கிரமாக வீசும் உப்புக் காற்று, அனல் வெக்கைக்குப் போட்டியாக முகத்திலடிக்கிறது. காது கன்னமெல்லாம் ஒரே எரிச்சல். வாயில் உப்புக் கரிக்கிறது. உடம்பு முழுவதும் கடல் சேற்றைப் பூசிக்கொண்டு அரை
நிர்வாணக் கோலத்தில் வெள்ளையர்கள் குடைகளின் கீழே படுத்துக்கிடக்கிறார்கள். மரணக்கடலின் நீரிலும் சேற்றிலும் கலந்துள்ள தாதுப் பொருள்கள், தோல் வியாதிகளைக் குணப்படுத்துகிறதாம். இதற்காகவே ஜேம்ஸ் தன்னுடைய மனைவி மோனிக்காவுடன் மரணக் கடலுக்கு வந்திருக்க