கலைக்களஞ்சியக் கதை: ‘எம்முளும் உளனொரு பொருநன்’
கலைக்களஞ்சியத்தைப் பயன்படுத்தும் வழக்கம் எனக்கு முதுகலை படிக்கும்போது தொடங்கியது. முறைசார் கல்வி முறையில் எங்குமே அகராதியையோ கலைக்களஞ்சியத்தையோ அறிமுகப்படுத்துவதும் இல்லை; பயன்படுத்தும் முறைகளைப் பயிற்றுவிப்பதும் இல்லை. பயன்படாதவற்றை விழுந்து விழுந்து படிக்க வேண்டியிருக்கிறது. பயன்பாடு கொண்டவை கற்றுக்கொள்ள எளியவையெனினும் அதற்கான வாயில்கள் திறப்பதில்லை. ‘அகராதியியல்’ பாடமாகவே வைக்கப்பட்டாலும் ஓர் அகராதியைக்கூடக் கண்ணால் பார்க்காமல் படித்துத் தேர்வெழுதிவிடும் நிலை இருக்கிறது. எனினும் சமூக வலைத்தளப் பெருக்கத்தால் இன்றைக்கு ஓரளவு முன்னேற்றம் தென்படுகிறது. இணையதளத்தில் ஒன்றைத் தேடும்போது முதலில் ‘விக்கிப்பீடியா’ வந்து நிற்பதால் பலருக்கும் இத்தகைய களஞ்சியம் பற்றி ஓரளவு தெரிந்திருக் கிறது. நான் கல்வி பயின்ற காலத்தில் ஒன்றுமே தெரிய