இயக்கக்காரி
இந்தியாவிற்கான எனது இந்தப் பயணம் சில மாதங்களுக்கு முன்பே திட்டமிடப்பட்டிருந்தது. சென்னையிலிருந்த ஒரு பெண்ணை நெடுங்காலமாய்க் காதலித்துக் கொண்டிருந்த நண்பனொருவன், தனது திருமணநாளை எங்களுக்கு இலை துளிர்காலத்தில் அறிவித்தான். இங்கிருந்து எல்லாராலும் அவ்வளவு தூரம் பயணித்து வரஇயலாத சென்னையில் நிகழும் மணவிழாவில், நீ மட்டுமாவது கட்டாயம் வரவேண்டுமெனக் கையைப்பிடித்துச்
சொல்லியுமிருந்தான். வேலையில் என் சிடுமூஞ்சி மானேஜரிடம் விடுமுறை கேட்க அவமானப்பட வேண்டுமே என்பதைவிட, இப்படி கோடை எரிக்கும் மாதத்தில் அங்கே தி