ஈரத் தீ
ஈரத் தீ
அவன் கடலை உடுத்தியிருந்தான்
மீன்களிருந்தன இன்னொரு நீலத்தில்
சூல்கொண்ட மேகக் கூந்தற்
காடாயிருந்தாள் அவள்
இரண்டு ஈரங்கள்
ஒன்றையொன்று அடைகையில் தீயாகின
தீய்ந்து
காலங்கள் அறுகையில்
அவனெனும் அவனில்லை
அவளெனும் அவளில்லை
ஈரத்தீ முளைத்து நுதல் வாயமர்ந்தது
என் முழுநிலா இரவே
மலைநகர்
மலைப் புகார்
தடமழியும் ஓர் புள்ளியில்
வானிலிருந்து இரண்டு நீர் படுக்கைகள்
மங்கிச் சுடர்ந்த மலைக்கப்பால்
பறவை மரப் பெருக்கில் மூலமறியாக் காற்று
அதற்கு அப்பால் தம்மைத் தாமேற்றும் மலைகள்
திரண்ட மருளொளிப் பாதாளம்
அவனில் அவள் கரைந்தாள்
அவளில் அவன் கரைந்தா