காந்தியின் தேசியம்
காந்தி 150
கட்டுரை
காந்தியின் தேசியம்
த. கண்ணன்
“கிராம சுயராச்சியம்தான் உண்மையான சுயராச்சியம் என்று பேசிய காந்தி, ஏன் இவ்வளவு பெரிய தேசத்தைக் கட்டமைத்தார்? இந்திய தேசத்தோடு இணைய விருப்பமில்லாத மக்களையும் ஏன் கட்டாயமாக இணைத்தார்,” என்று ஒரு நண்பர் கேட்டார். அவர் பல்வேறு சமூகப்பணிகளில் ஈடுபட்டிருப்பவர். உள்ளூர் அமைப்புகளை வலுவாக்குவதில் நம்பிக்கைகொண்டவர். தனது பகுதியைத் தன்னிறைவடையச் செய்யப் பாடுபடுபவர். எளிமையான வாழ்க்கை வாழ்பவர். ஒரு காந்தியர் என்றே சொல்லலாம். ஆனால் காந்தியின் தேசியம் காரணமாக அவரைக் கடுமையாக நிராகரிப்பவர். இக்கேள்வ