தமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு
சிறப்புப் பகுதி: தமிழ் சமஸ்கிருத உறவு
தமிழ், சமஸ்கிருதம், பாலி இலக்கண உறவு
ரா. ராமச்சந்திரன்
தமிழ், சமஸ்கிருதம், பாலி மரபிலக்கணங்களுக்கு இடையேயான உறவை வெளிக்காட்டும் வகையில் ஒப்பீட்டு ஆய்வுகள் நிகழ்த்தப் பெற்றுள்ளன. தமிழுக்கும் சமஸ்கிருதத் திற்கும் இடையே யான ஒப்பீடுகளில் ‘தொல்காப்பிய’மும் ‘வீரசோழிய’மும் ‘அஷ்டாத்யாயீ’யோடு வைத்து நோக்கப் பெற்றுள்ளன. பி.சி. ராமானுசாச்சாரி (1978), கு. மீனாட்சி (1980), சா. தண்டபாணி தேசிகர் (1982) ஆகியோரின் கட்டுரைகள், தமிழ்த் ‘தொல் காப்பிய’த்தையும் சமஸ்கிருத ‘அஷ்டாத்யாயீ’யையும் ஒப்பிட்டு ஆய்ந்துள்ளன. புத்தமித்தரனாரின் ‘இலக்கணக் கோட்பாடு’ (1985) என்ற கட்டுரையும் ‘வீரசோழிய இலக்கணக்கோட்பாடு’ (1992), ‘தமிழ், சமஸ்கிருத இலக்கண மரபுகள்’ (2015) முத