கோவிந்தராவின் மாப்பிள்ளை
கதை
கோவிந்தராவின் மாப்பிள்ளை
தி. ஜானகிராமன்
கோவிந்த ராவ், மொட்டை மாடிக் கைப்பிடிச் சுவர்மீது ஒரு காலை மடக்கிப்போட்டு உட்கார்ந்ததும் உட்காராததுமாக, எங்கோ தொலைவில் பார்த்துக்கொண்டிருந்தார்.
“ரொம்பப் பெரிய யோசனை போலிருக்கு!”
“ஆமாம் சார், எங்களுக்கெல்லாம் ஏன் பண்டிகை வருதுன்னு கேட்டுக்கிட்டிருக்கேன்.”
“யாரை?”
“யாரயோ! உடுப்பி கிருஷ்ணனைக் கேட்டாச்சு, பதிலில்லை. வேறு யாரைக் கேட்கலாம்னு யோசனை,” என்று வழக்கமாகப் பூக்கிற புன்முறுவலைப் பூத்தார். அந்தப் புன்முறுவல் சோடா பாட்டில் மூக்குக்கண்ணாடிக்குள் சிறுத்திருந்த கண்