என்ன அது?
கதை
என்ன அது?
எம்.வி. வெங்கட்ராம்
ஓவியங்கள்: ஞானப்பிரகாசம் ஸ்தபதி
“நிசமாகச் சொல்கிறேன், ராஜா. நீ அழகாக இருக்கிறாய். பெண்களைப் போல். பட்டுப்போல இருக்கும் உன் கன்னங்களைக் கிள்ளிக் கிள்ளிக் கசக்க வேண்டும் என்று தோன்றுகிறது...”
என் கன்னங்களைக் கிள்ளி உதடுகளை நெருடியவாறு என் அழுகையை வியந்துகொண்டிருந்தாள் மனோரமா.
நானோ வெட்கத்தால் ஒடுங்கிக்கொண்டிருந்தேன். சிவப்பு முகம், வெட்கத்தால் மேலும் செம்மைகொள்ளும் என்பது உண்மையானால் அப்போது என் முகம் ரத்தச் சிவப்பாகி இருக்கலாம்; அவள் கிள்ளியதால் பட