வேதநாயகரும் சமயநல்லிணக்கமும்
சிறப்புப் பகுதி: பொருநை பக்கங்கள்
வேதநாயகரும் சமயநல்லிணக்கமும்
அமுதன் அடிகள்
தமிழ் மொழிக்கும் இனத்துக்கும் மாயூரம் வேதநாயகர் ஆற்றிய தொண்டுகள் மிகப் பல. முதல் தமிழ் நாவலாசிரியராகிய அவர் இசைத் தமிழுக்கும் சட்டத் தமிழுக்கும் பெண்கல்விக்கும் ஆற்றிய அரும்பணிகள் வரலாற்றுச் சிறப்புமிக்கவை.
தாம் பிறந்த ஊராகிய குளத்தூரை விட்டுத் திருச்சிராப்பள்ளிக்கு வந்து, ஆங்கிலமும் தமிழும் பயின்று நீதிமன்ற மொழிபெயர்ப்பாளராகப் பணியாற்றத் தொடங்கியபோது (1850) வேதநாயகருக்கு இருபத்து நான்கு வயது. அவ்வயதில் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளையின் வேண்டுகோளுக்கிணங்கித் தருமபுரம் மடத்துக்கு நீதிமன்ற வழக்கில் இவர் பேருதவி புரிந்தவர். தாம் கிறித்தவச் சமயத்தவராக இருந்தும் உண்மையும் நேர்மையும் தருமபுரம் ஆதீனத்தார் பக்கம் இருந்ததால் தயங்காமல் அவர்களுக்கு உதவி, உண்மை வெற்றிபெறச் செய்தார்.